ஃபானி புயல்: ஒடிசாவில் 9 பேர் உயிரிழப்பு
In இந்தியா May 4, 2019 4:46 am GMT 0 Comments 2205 by : Yuganthini

ஒடிசாவில் ஏற்பட்ட ஃபானி புயலில் இதுவரை9 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கக் கடலில் உருவான இந்த ஃபானி புயல், நேற்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் ஒடிசா மாநிலத்தில் கரையைக் கடக்கத் தொடங்கியது. இதன்போது ஏற்பட்ட சூறாவளிக் காற்றினால் செல்போன் கோபுரங்கள், மரங்கள், மின்கம்பங்கள் ஆகியன சாய்ந்து விழுந்துள்ளன.
இந்நிலையிலேயே குறித்த புயலினால் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை புயல் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறிய சுமார் 11 இலட்சம் பேர் தங்களின் வீடுகளுக்குத் திரும்பத் ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர், இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸார் உள்ளிட்டோர் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.