ஃபானி புயல் – முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!
In இந்தியா May 2, 2019 3:57 am GMT 0 Comments 1922 by : Krushnamoorthy Dushanthini

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபானி புயலானது தீவிரமடைந்துள்ள நிலையில், ஒடிசா மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த புயலின் காரணமாக 43இற்கும் மேற்பட்ட ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த புயலானது புரி மாவட்டம் கோபால்பூர் சந்த்பாலி பகுதிகளுக்கு இடையேயான கடலோர பகுதியில் கரையை கடக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதன்போது மணிக்கு 175 முதல் 185 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.