ஃபிளமூவர் பெக்கியூரியின் கொலை தொடர்பாக டென்மார்க்கில் ஒருவர் கைது
In இங்கிலாந்து January 22, 2020 12:53 pm GMT 0 Comments 3122 by : S.K.Guna

தெற்கு லண்டன், பற்றசீயில் கிறிஸ்துமஸ் தினத்துக்கு முதல்நாள் வீட்டின் முன்பாகச் சுட்டுக்கொல்லப்பட்ட ஃபிளமூவர் பெக்கியூரியின் (Flamur Beqiri) கொலை தொடர்பாக ஒருவர் டென்மார்க்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் வந்த 22 வயதான சந்தேக நபர், ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸாரின் வேண்டுகோளின்படி கோபன்ஹேகன் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஃபிளமூவர் பெக்கியூரியைச் சுட்டுக் கொன்றதாக சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அவர் டென்மார்க்கில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஃபிளமூவர் பெக்கியூரி, ஸ்வீடனில் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்றும் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார்கருதுகின்றனர்.
36 வயதான ஃபிளமூவர் பெக்கியூரி டிசெம்பர் 24 ஆம் திகதி இரவு 9 மணியளவில் தனது குடும்பத்தினருடன் தனது பற்றசீ வீட்டிற்கு திரும்பியபோது, அவரது வீட்டு வாசலில் மனைவி மற்றும் குழந்தையின் முன்பாக சந்தேகநபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
நன்றி news.sky.com
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.