ஃபைசரின் கொரோனா தடுப்பூசியை இந்தியா வாங்காது என தகவல்
In இந்தியா December 14, 2020 9:51 am GMT 0 Comments 1597 by : Dhackshala

அதிகமான விலை மற்றும் மைனஸ் 70 டிகிரியில் வைக்க வேண்டிய நிலை ஆகியவற்றால் ஃபைசரின் கொரோனா தடுப்பூசியை இந்தியா வாங்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
5 நாடுகளில் அவசரகால அனுமதிக்கான ஒப்புதலை பெற்றுள்ள இந்த தடுப்பூசியை இந்தியா வாங்க வேண்டுமானால் ஊசி ஒன்றுக்கு 2 ஆயிரத்து 728 ரூபாய் கொடுக்க வேண்டும்.
அதேநேரம் இந்தியாவில் சீரம் இந்தியா நிறுவனத்தால் உருவாக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை 737 ரூபாய் மட்டுமே ஆகும்.
அரசுகள் வாயிலாக மட்டுமே அந்தந்த நாடுகளுக்கு தடுப்பூசியை விற்கவுள்ளதாக ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, குறைந்த விலைக்கு உள்நாட்டு தயாரிப்பு கிடைக்கும் நிலையில், அதிக விலை உள்ள ஃபைசரின் தடுப்பூசி இந்தியாவுக்கு வர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.