அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேசத்தில் வேட்புமனு

மாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று (வியாழக்கிழமை) உத்தர பிரதேசத்தின் ஆசம்கர் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், ஆசம்கர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இன்று அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆசம்கர் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா உடனிருந்தார்.
இதன்போது, உத்தரப் பிரதேசத்தில் தனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஆசம்கர் தொகுதியில் அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவ் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.