‘அகோரி’ திரைப்படத்தின் டிரெய்லர்
In சினிமா May 7, 2019 9:00 am GMT 0 Comments 1807 by : adminsrilanka
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ‘திருமணம்’ என்ற தொடர் கதை மூலம் இரசிகர்களிடத்தில் பிரபலமாகி வரும் நடிகர் சித்து நடித்த ‘அகோரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியள்ளது.
ஆர்.பி பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சார்பில் சுரேஷ் கே.மேனன் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
நடிகை சாயாஜி ஷிண்டே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் சின்னத்திரை பிரபலமான சித்து, மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை டி.எஸ்.துரைக்குமார் இயக்கியுள்ளார்.
வசந்த் ஏ.வி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு 4 இசைக்குழுக்கள் இசையமைத்துள்ளன. பேய் மற்றும் அகோரிகளை பற்றிய கதையாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.