அக்கரைப்பற்றில் 300 பி.சி.ஆர் முடிவுகள் வெளிவரவுள்ளன: தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் – சுகுணன்
In இலங்கை November 30, 2020 7:51 am GMT 0 Comments 1828 by : Dhackshala
அக்கரைப்பற்றில் 300 பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
இந்த நிலையில் அக்கரைப்பற்றில் தற்போது வரை 58 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகார பிரிவிற்கு உட்பட்ட அக்கரைப்பற்று சந்தைப் பகுதியில் ஏற்பட்ட கொவிட் 19 பரம்பல் காரணமான இதுவரை 13 பேரும் இச்சந்தையுடன் தொடர்புபட்டவர் என்ற ரீதியில் மற்றுமொருவரும் திருக்கோவில் பகுதியில் இணங்கானப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள 13 சுகாதார வைத்திய அதிகார பிரிவினுள் மொத்தமாக 86 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று சந்தைத் தொகுதியில் மாத்திரம் 58 பேர் தற்போது வரை இனங்காணப்பட்டுள்ளனர். அதில் 48 பேர் அக்கரைப்பற்று பகுதியைச் சொந்த இடமாக கொண்டவர்கள்.
நாங்கள் அக்கரைபற்றில் எடுக்கின்ற பி.சி.ஆர் மாதிரிகள் 20 வீதமானவை பொசிட்டிவ் ஆகவே காணப்படுகின்றது. எனவே மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும்.
கடந்த 5 நாட்களாக 500 பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம். ஆனால் 300 பீ.சி.ஆர் பரிசோதனைக்காக காத்திருக்கின்றோம்.
ஆகவே இன்னும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க சாத்தியம் இருக்கின்றது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.