அடம்பிடிக்கும் சிலம்பரசன் – வெளியான அதிரடி அறிவிப்பு

திரிவிக்ரம் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அத்தாரின்டிகி தாரேதி’. பவன் கல்யாண் – சமந்தா – பிரணீதா இணைந்து நடித்த அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு தற்போது நடித்து வருகிறார். சுந்தர்.சி இயக்கி வரும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். மேலும் கேத்ரின் தெரசா, யோகிபாபு, மகத், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடத்தி வந்த படக்குழுவினர் தற்போது படத்திற்கு ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என பெயர் வைத்திருக்கிறார்கள். மேலும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருக்கின்றது.
Here's the first look of STR's ? next VANTHA RAJAVATHAAN VARUVEN ? directed by SUNDAR.C ??#VanthaRajavathaanVaruven team wishes you all a happy & safe DIWALI ????✨??#STR | #SundarC | @hiphoptamizha | #SelvaBharathiK | #GopiAmarnath pic.twitter.com/9S6e5OGzYb
— Lyca Productions (@LycaProductions) November 6, 2018
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.