அடித்தால் திருப்பி அடிப்போம்: எச்சரிக்கிறார் ஞானசார தேரர்
இலங்கையொரு பௌத்த நாடு என்ற அடிப்படையில் சிங்களவர்களுக்கு யார் அடித்தாலும் திருப்பி அடிப்போம் என பொதுபல சேனா கட்சியின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“சிங்கள, முஸ்லிம் என பேதமின்றி அனைவருக்கும் தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். ஆனால் இதுவொரு மனிதர்களிற்கிடையில் நடக்கும் சாதாரண சம்பவமாகும். ஆனால் இதனை மதங்களின் அடிப்படையில் பார்த்தது தவறு. இவ்வாறு பார்ப்பதற்கு சமூகத்திற்கு தற்போதைய அரசியல் சூழல் கற்றுக்கொடுத்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு பிரதமரும், பொலிசும் பதில் செல்ல வேண்டும். கொலை செய்யப்பட்டவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தீர்வொன்றை பெற்றுக்கொடுத்திருந்தால் இந்த மோதல் சம்பவம் அரங்கேறியிருக்காது.
இது சிங்கள பௌத்த நாடு, இந்த நாட்டில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை முஸ்லிம் மக்களுக்கு நாம் சொல்லித்தருகின்றோம். தற்போது நாடும் நாட்டு அரசியலும் ஸ்திரமற்ற நிலையில் காணப்படுகின்றது. அரசாங்கமும் மக்களும் தற்போது பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும். தயவு செய்து வன்முறைகளில் இறங்க வேண்டாம்இது பௌத்த நாடு. அடித்தால் திருப்பி அடிப்போம். கொலை செய்தால் நாமும் திருப்பி அடிப்போம். ஆகவே வன்முறைகள் வேண்டாம். அமைதியாக இருக்கவேண்டும்.இதற்கு அரசியல் தலைமைகள் ஒன்றுக்கூடி தீர்வொன்றை எடுக்க வேண்டும்.” என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.