அடுத்த இரண்டு மாதங்கள் கொரோன வைரஸ் பரவலுக்கு உகந்தவை – கொரோனா தொழிநுட்ப குழு எச்சரிக்கை!
In இந்தியா November 24, 2020 10:12 am GMT 0 Comments 1360 by : Krushnamoorthy Dushanthini

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வைரஸ் பரவலுக்கு உகந்த சூழ்நிலை இருப்பதாக கொரோனா தொழில்நுட்ப குழு தெரிவித்துள்ளது.
கர்நாடக கொரோனா தொழில்நுட்ப குழுவின் 52ஆவது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பாடசாலைகளை திறக்க அரசுக்கு ஆலோசனை வழங்குவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதில் வருகிற டிசம்பர் மாதம் வரை பாடசாலைகளை திறக்க வேண்டாம் என்று அரசுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு பாடசாலைகளை திறப்பது குறித்து டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் மீண்டும் கூடி ஆலோசிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தேசிய அளவில் கொரோனா குறைந்த நிலையில் டெல்லி, அரியானா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் கடும் குளிர் இருக்கும். இது வைரஸ் பரவலுக்கு உகந்த சூழ்நிலையாக இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.