அடுத்த கொன்சர்வேற்றிவ் தலைவர் பிரெக்ஸிற்றை ஆதரிப்பவராக இருக்கவேண்டும்: ஹண்ட்
In இங்கிலாந்து April 26, 2019 9:22 am GMT 0 Comments 2644 by : shiyani

கொன்சர்வேற்றிவ் கட்சியின் அடுத்த தலைவர் பிரெக்ஸிற்றை ஆதரிப்பவராக இருக்க வேண்டுமென வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் தெரிவித்துள்ளார்.
தனது பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு டோரி உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் பதவி விலகுவதற்கு தயாராக உள்ளதாக பிரதமர் தெரேசா மே தெரிவித்திருந்தார். தெரேசா மே-யின் பதவிக்காக பல அமைச்சர்களும் போட்டிபோட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இவ்விடயம் குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஹண்ட் பிரெக்ஸிற்றை ஆதரிக்கும் ஒருவரே அடுத்த கொன்சர்வேற்றிவ் தலைவராக வரவேண்டுமென தெரிவித்துள்ளார்.
மேலும் இப்பதவிக்கு ஹண்ட் போட்டியிடுவாரா என்ற செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு காத்திருந்து பாருங்கள் எனவும் அவர் பதிலளித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.