அடுத்த மாத இறுதிக்குள் 11 மில்லியன் இலங்கையர்களுக்கு தடுப்பூசி !
In இலங்கை January 19, 2021 6:37 am GMT 0 Comments 1510 by : Jeyachandran Vithushan
அடுத்த மாத இறுதிக்குள் 11 மில்லியன் இலங்கையர்கள் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வார்கள் என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், 50 வீதமானோருக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தற்போது நான்கு கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இலங்கையின் சனத்தொகையில் 20 சதவீதமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியின் ஏற்றுமதியின் போது இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என இந்திய வௌிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.