அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்: பிரதமர் மோடி மரியாதை
In இந்தியா December 6, 2020 3:59 am GMT 0 Comments 1615 by : Yuganthini

அண்ணல் அம்பேத்கர் குறித்த நினைவுகளை அவரது புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து மரியாதை செலுத்தியவண்ணம் உள்ளனர்.
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 64ஆவது நினைவு தினம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது.
அம்பேத்கரின் 64ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மும்பை சைத்யபூமியிலுள்ள அண்ணல் அம்பேத்கரின் நினைவிடத்தில் இன்று காலை முதலே ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும், அண்ணல் அம்பேத்கர் குறித்த நினைவுகளை அவரது புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து மரியாதை செலுத்தியவண்ணம் உள்ளனர்.
இதேவேளை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, அவரை நினைவுகூர்ந்து ருவிட்டர் வாயிலாக மரியாதை செலுத்தி உள்ளார்.
“அண்ணல் அம்பேத்கரின் எண்ணங்களும் இலட்சியங்களும் மக்களுக்கு தொடர்ந்து வலிமையைத் தருகின்றன. நம் தேசத்திற்காக அவர் கண்ட கனவுகளை நிறைவேற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம்”என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவி வகித்த வைத்திய அம்பேத்கர், ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூக நீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். இவருக்கு, இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான பாரத ரத்னா விருது, இவரது இறப்புக்குப் பின் 1990ல் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.