அதிகாரிகளின் அசமந்தம் குறித்து சி.வி.கே அதிருப்தி!
வட மாகாண ஆளுகைக்குட்பட்ட திணைக்களங்கள் மற்றும் சபைகளில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் கிடப்பில் இருப்பதாக வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாகாண சபையின் ஆட்சிக்காலத்தில் வடக்கு மாகாண கூட்டுறவு திணைக்களம் மற்றும் யாழ் மாநகர சபையில் இடம்பெற்ற மோசடி தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் அதுகுறித்து அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதுகுறித்து தாம் பிரதம செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் இது தொடர்பாக தான் ஆராய வேண்டிய கடப்பாட்டில் உள்ளதாகவும் எனினும் இன்றுவரை அது தொடர்பான எந்த ஒரு செயல்பாடும் இடம்பெறாத நிலையில் அது மன வருத்தம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.