அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டு – 16 வியட்நாமிய மீனவர்கள் மலேசிய அதிகாரிகளினால் கைது
In உலகம் January 24, 2021 10:28 am GMT 0 Comments 1360 by : Jeyachandran Vithushan

அனுமதி இன்றி மலேசியாவின் கடலில் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக இரண்டு படகுகளில் வந்த 16 வியட்நாமிய மீனவர்களை மலேசிய கடல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மலேசிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள தெரெங்கானு மாநிலத்தில் மீனவர்களும் அவர்களது படகுகளும் வெள்ளிக்கிழமை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு படகுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், 18 முதல் 62 வயது வரையிலான 16 பேர் இருந்ததாகவும் அவர்களிடம் சரியான அடையாள ஆவணங்கள் இருக்கவில்லை என்றும் நீரில் மீன் பிடிக்க எந்த அனுமதியும் இல்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மலேசியா மற்றும் வியட்நாம் ஆகியவை தென் சீனக் கடலின் சில பகுதிகளுக்கு அதிகப்படியான உரிமைகோரல்களைக் கொண்ட நாடுகளில் இரண்டு என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.