அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறுவது அவசியம்: அ.தி.மு.க. வலியுறுத்து

அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது அவசியம் என, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தொண்டர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று (வெள்ளிக்கிழமை) இருவரும் கூட்டாக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், அண்ணாவின் ஆட்சி காலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட மக்கள் நலன் பணிகளை விருவுபடுத்தி, செயற்படுத்தி காட்டியவர், மறைந்த முன்னாள் முதலவர் ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டியுள்ளனர்.
அத்தோடு, அண்ணாவிற்கு பாரதரத்னா விருது வழங்குவது தொடர்பில், அமைச்சரவை தீர்மானம் குறித்து மத்திய அரசிடமிருந்து கடிதம் வருமென நம்புவதாகவும், குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும் அடுத்துவரும் அனைத்து தேர்தல்களிலும், அ.தி.மு.க வெற்றி பெறுவது அவசியம் என, குறித்த கடிதத்தில் இருவரும் கூட்டாக வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.