அனைத்து நாட்டு சுற்றுலாப் பயணிகளையும் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை
In இலங்கை January 10, 2021 3:22 am GMT 0 Comments 1461 by : Dhackshala

உக்ரைன் நாட்டவர்கள் மாத்திரமின்றி ஏனைய நாட்டு சுற்றுலா பயணிகளையும் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பலாங்கொடையில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு தொடர்ந்து நாட்டை மூடி வைத்திருக்க முடியாது என்றும் நாட்டின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடையவிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தற்போது காணப்படும் குறைப்பாடுகளை நிவர்த்திசெய்து எதிர்வரும் நாட்களில் சகல நாட்டினது சுற்றுலா பயணிகளையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.