கோட்டாபயவுக்கு ஆலோசனை வழங்கும் சங்ககார
In ஆசிரியர் தெரிவு November 18, 2019 4:36 am GMT 0 Comments 2390 by : Yuganthini

அரசியல் கட்சி, குடும்பம் என்பவற்றுக்கு அப்பால் இலங்கையர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க கூடிய புதிய வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதே சிறந்ததென புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு, குமார் சங்கக்கார தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அனைத்து இலங்கையர்களையும் உண்மையாக ஒன்றிணைக்கும் பார்வையும், வல்லமையும் பெற வாழ்த்துகிறேன்.
நாட்டிலுள்ள அனைத்து இலங்கையர்களின் பாதுகாப்பு, செழிப்பான வாழ்க்கையை உறுதிப்படுத்த வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.