அன்னை பூபதியின் 31ஆவது நினைவுநாள் கிளிநொச்சியிலும் அனுஷ்டிப்பு
In இலங்கை April 19, 2019 7:47 am GMT 0 Comments 2474 by : Dhackshala
தமிழின விடுதலைக்காக அகிம்சை வழியில் தனது இன்னுயிரை ஈகம் செய்த நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் நினைவு நாள் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை)) காலை 9.30 மணிக்கு உணர்வெழுச்சியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணித் தலைவரும் பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் தவிசாளருமான சு.சுரேன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
முதல் நிகழ்வாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து கலந்துகொண்ட உணர்வாளர்களால் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மக்கள் தமிழ் தேசிய உணர்வாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.