அப்துல்கலாமை வித்தியாசமான முறையில் கௌரவித்து பெண் சாதனை!

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் பிறப்பு முதல் இறப்பு வரையான சாதனைகளை, நுண் சிற்ப கலைமூலம் வடிவமைத்து பெண்னொருவர் சாதனை படைத்துள்ளார்.
திருப்பூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா என்னும் பெண், அப்துல்கலாமால் மிகவும் ஈர்க்கப்பட்டு, தனது பெயரை ஐஸ்வர்யா கலாம் என மாற்றி அமைத்துள்ளார்.
இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) அப்துல்கலாமின் பிறந்த நாள் இந்தியா முழுவதும் சிறப்பிக்கப்படும் நிலையில், கலாம் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், ஐஸ்வர்யா என்னும் பெண், பென்சில் முனையில் நுண் சிற்பங்களை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.
கலாமின் அரசியல் பயணம் உள்ளிட்ட 14 அம்சங்களை, 3 மணி நேரத்தில் நுண்சிற்பமாக வடிவமைத்து சாதனை படைத்த ஐஸ்வர்யாவிற்கு, ‘கலாம் புக் ஒப் ரெக்கோட்’ சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சென்னை தியாகராஜ நகரில் அப்துல்கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு, ரத்ததான முகாம் மற்றும் நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது.
இதேபோன்று, அப்துல்கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் காணொளியை பிரதமர் மோடி அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.