அப்பாவி இளைஞர்களை தடுப்பில் வைத்திருக்க அரசாங்கம் பாதுகாப்பு அச்சுறுத்தல் என கூறியதா? சுமந்திரன் கேள்வி
In இலங்கை February 9, 2021 2:47 pm GMT 0 Comments 1775 by : Jeyachandran Vithushan

பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, அரசாங்கமே விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பினை வழங்கியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய அவர், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும் தெற்கில் உள்ள 15 சிங்கள பாதாள குழுக்களின் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 30 பேரை தடுப்பில் வைக்கும் வரை இவை தொடர்பாக தான் எதனையும் அறிந்திருக்கவில்லை என்றும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.
எனவே பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தனக்கு தெரிவிக்காது அல்லது முறையிடாதபோது அரசாங்கம் அநேகமானோரை தடுப்பில் வைக்குமானால் தற்போது அந்த பாதுகாப்பினை மீளப்பெறுவது ஏன் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
ஒருவேளை அப்பாவி இளைஞர்களை தடுப்பில் வைத்திருப்பதாக தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என அரசாங்கம் தெரிவித்திருக்கலாம் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
தற்போது பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில் யாதாயினும் பாதகம் ஏற்படுமாயின் அரசாங்கமே அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.