அமரப்பள்ளி கட்டுமான குழுமத்திற்கு எதிராக எம்.எஸ்.டோனி மோசடி வழக்கு
In இந்தியா April 28, 2019 10:28 am GMT 0 Comments 2580 by : Yuganthini

அமரப்பள்ளி கட்டுமான குழுமத்திற்கு எதிராக இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி உச்ச நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள அமரப்பள்ளி கட்டுமான குழுமத்திடமிருந்து வீடுகளை வாங்குவதற்கு, 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அக்குழுமத்திடம் இருந்து வீடுகளை வாங்க முன்பதிவு செய்துள்ளனர்.
அதேபோன்று மகேந்திரசிங் டோனி, ராஞ்சியிலுள்ள பென்ட் ஹவுஸ் எனப்படும் கண்ணாடி மாளிகை ஒன்றினை அமரப்பள்ளியிடம் இருந்து பெறுவதற்கு முன்பதிவு செய்திருந்தார்.
ஆனால் குறித்த குழுமம் கூறியபடி, வீட்டையும் கையளிக்காமல் பணத்தையும் திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி விட்டதாக எம்.எஸ்.டோனி உச்சநீதிமன்றத்தில் தற்போது வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இதேவேளை அமரப்பள்ளி குழுமத்திடமிருந்து 40 கோடி ரூபாயை பெற்றுத்தருமாறு டோனி ஏற்கனமே வழக்கு தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.