அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது – நெதர்லாந்து அரசாங்கம்
In ஐரோப்பா January 27, 2021 7:41 am GMT 0 Comments 1335 by : Jeyachandran Vithushan

நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது என நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்படும் வன்முறை போராட்டங்கள் மூன்றாவது நாளாக தொடரும் நிலையில் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.
மேலும் ரோட்டர்டாம் உள்ளிட்ட மேலும் சில நகரங்களில் கடைகள் கொள்ளையிடப்பட்ட நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் கறைபடிந்தவையென நெதர்லாந்து நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நெதர்லாந்தில் போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறைகளில் ஈடுபட்ட 180 இற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு குற்றவியல் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.