அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செயலாளராக லாய்ட் ஆஸ்டின் நியமிக்கப்படவுள்ளதை உறுதிசெய்த ஜோ பிடன்!

அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செயலாளராக முதல் முறையாக கருப்பினத்தைச் சேர்ந்த லாய்ட் ஆஸ்டின் நியமிக்கப்படவுள்ளதை அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன், உறுதிசெய்துள்ளார்.
முன்னதாகவே இந்த செய்தியினை அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்திருந்த போதும் ஜோ பிடன், தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.
பென்டகனை வழிநடத்திய முதல் ஆபிரிக்க- அமெரிக்கரான 67 வயதான ஜெனரல் ஆஸ்டினின் நியமனத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கினால், கருப்பினத்தைச் சேர்ந்த முதல் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற பெருமையை லாய்ட் ஆஸ்டின் பெறுவார்.
ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது அமெரிக்க மத்தியக் கூட்டுப் படை தளபதியாக லாய்ட் ஆஸ்டின் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்துள்ளார்.
அதற்கு முன்னர் இராணுவ துணைத் தளபதியாக கடந்த 2012ஆம் ஆண்டில் அவர் பொறுப்பு வகித்தார். தற்போது ஓய்வுபெற்று ஏழு வருடங்களுக்கும் குறைவான காலத்துக்கு பிறகு புதிய பொறுப்பினை ஏற்கவுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.