அமெரிக்காவிடம் இருந்து இந்தியா கொள்வனவு செய்த ஆயுதங்கள் குறித்த தகவல் வெளியீடு!
In இந்தியா December 10, 2020 9:45 am GMT 0 Comments 1383 by : Krushnamoorthy Dushanthini

அமெரிக்காவிடம் இருந்து இந்தியா இந்த ஆண்டில் 25 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளது.
அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பின் ஆட்சி நிறைவடையவுள்ள நிலையில், அவருடைய ஆட்சிக் காலப்பகுதியில், அமெரிக்கா உலக நாடுகளுக்கு எவ்வளவு மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது என்ற விபரத்தை பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவுனம் வெளியிட்டுள்ளது. குறித்த விபரத்திலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2019-ம் ஆண்டு உலக நாடுகளுக்கு 55.7 பில்லியன் டொலர் (சுமார் 4 இலட்சத்து 17 ஆயிரத்து 750 கோடி) ஆயுதங்களை அமெரிக்கா விற்பனை செய்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்த விற்பனை 50.8 பில்லியன் டொலர் அளவுக்கு (சுமார் 3 இலட்சத்து 81 ஆயிரம் கோடி) சரிவை சந்தித்துள்ளது.
நடப்பு ஆண்டில் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா 3.4 பில்லியன் டொலர் (சுமார் 25 ஆயிரத்து 500 கோடி) மதிப்பிலான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளது. இது கடந்த 2019 ஆம் ஆண்டை விட அதிகமாகும்.
இந்தியாவை விட அதிகளவில் மொராக்கோ அதிகளவான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.