அமெரிக்காவின் திட்டத்திற்கு ஈரான் கடும் விமர்சனம்

உலகின் மிகவும் செல்வாக்குடைய இஸ்லாமிய இயக்கங்களில் ஒன்றான முஸ்லிம் சகோதரத்துவ சமூகத்தை சர்வதேச தீவிரவாத அமைப்பாக பெயரிடும் அமெரிக்காவின் திட்டத்தை ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.
எவரையும் தீவிரவாத அமைப்பாக பெயரிடும் நிலையில் அமெரிக்கா இல்லை என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
டோஹாவில் வைத்து இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாட் ஹரிஃப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மிகப்பெரிய பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அமெரிக்காவின் இவ்வாறான முயற்சிகளை தாம் நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் இச்செயற்பாட்டினால் மத்திய கிழக்கில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட எகிப்தின் பழைமையான இஸ்லாமிய இயக்கத்திற்கு எதிராக பொருளாதார மற்றும் பயண தடைகள் விதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.