அமெரிக்காவின் பயங்கரவாத அமைப்புப் பட்டியலில் நீடிக்கும் LTTEஇன் பெயர்
In இலங்கை January 17, 2021 2:45 am GMT 0 Comments 1287 by : Dhackshala

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பினை அமெரிக்க வெளிவிவகாரத்துறை தனது வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் (FTO) தொடர்ந்தும் உள்ளடக்கியுள்ளது.
கடந்த 10/8/1997ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதல் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு அமெரிக்காவின் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் உள்ளது.
வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் (FTO) குடிவரவு மற்றும் தேசிய சட்டத்தின் 219ஆவது பிரிவின்படி அமெரிக்க வெளிவிவகார செயலாளரால் நியமிக்கப்பட்ட அமைப்புகளாகும்.
பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்க போராட்டத்தில் FTO ஒரு முக்கிய பங்கை வழங்குவதுடன் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான ஆதரவைக் குறைப்பதற்கான ஒரு சிறந்த வழியாகவும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.