அமெரிக்காவில் இராணுவ ஜெட் விமானம் விழுந்து விபத்து – இருவர் உயிரிழப்பு
In அமொிக்கா February 21, 2021 3:15 am GMT 0 Comments 1151 by : Dhackshala

அமெரிக்காவில் இராணுவ ஜெட் விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
14வது படைப்பிரிவைச் சேர்ந்த T-38 ரக விமானத்தில் விமானிகள் நேற்று மாலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
மிசிசிப்பியில் உள்ள கொலம்பஸ் விமானத்தளத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் புளோரிடாவின் டல்லாஹஸ்ஸிக்கு செல்வதாக இருந்தது.
இந்நிலையில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இரு விமானிகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
எனினும் குறித்த இரு விமானிகளின் விபரங்களை விமானப்படை வெளியிடவில்லை.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.