அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசித் திட்டம் ஆரம்பம்- முதல் தடுப்பூசி போடப்பட்டது!

அமெரிக்காவில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நியூயோர்க்கின் லாங் தீவில் தாதியர் ஒருவருக்கே ஃபைசர் நிறுவனத்தின் முதல் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியது.
இந்நிலையில், மில்லியன் கணக்கான தடுப்பு மருந்துகளை ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் விநியோகித்து வருவதுடன் இன்னும் ஒரு வாரத்துக்குள் 150 மருத்துவமனைகள் தடுப்பூசியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, அமெரிக்காவில் இதுவரை ஒரு கோடியே 67 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் இறப்புக்கள் மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளன.
இந்நிலையில், அமெரிக்கத் தடுப்பூசிம் திட்டத்தில் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் 100 மில்லியன் மக்களைச் சென்றடைய வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.