அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறித்த விபரம்!

அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் 78 ஆயிரத்து 640 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 86 இலட்சத்து 03 ஆயிரத்து 813 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்து 428 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 இலட்சத்து 07 ஆயிரத்து 746 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.