அமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை!

பிறந்து ஆறு மாதங்களுக்குள் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களையும் சுற்றி வரவுள்ளது கனடாவைச் சேர்ந்த குழந்தை ஒன்று.
இதன்மூலம் ஆறு மாதங்கள் ஆவதற்குள் அமெரிக்காவின் 50 மாகாணங்களையும் சுற்றி வந்த குழந்தை என்ற பெயர் அந்த குழந்தைக்கு கிடைக்கவுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கனடாவினைச் சேர்ந்த Harper என்னும் அந்த குழந்தையின் பெற்றோரான Cindy Lim மற்றும் Tristan Yeats ஆகியோருக்கு அமெரிக்காவின் 50 மாகாணங்களுக்கும் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.
இந்தநிலையில் தங்கள் மகள் Harper ஐ ஒரு சாட்டாக வைத்து இருவரும் ஊர் சுற்ற முடிவு செய்தனர்.
சிவில் எஞ்சினியரான Tristan உம், வழக்கறிஞரான Cindy உம் விடுமுறை எடுத்துக்கொண்டு தங்கள் ஜீப்பையும் எடுத்துக் கொண்டு New Brunswick இலிருந்து ஜூன் 18ஆம் திகதி புறப்படும்போது Harper பிறந்து வெறும் ஆறு வாரங்கள் மட்டுமே ஆகியிருந்தது.
மகளுக்கு ஆறு மாதங்கள் ஆகும் முன் அமெரிக்காவின் 50 மாகாணங்களையும் சுற்றி வருவது என முடிவு செய்துள்ளார்களாம் இந்த குடும்பத்தினர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.