அமெரிக்கா உள்விவகாரங்களில் தலையிடுகிறது- ரஷ்யா குற்றச்சாட்டு!

எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை ஆதரிக்கும் எதிர்ப்பாளர்கள் மீதான ஒடுக்குமுறையைத் தொடர்ந்து அமெரிக்கா தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பேசுவத்கு ரஷ்ய ஜனாதிபதி தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் பல மாதங்களாக சிகிச்சையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் ரஷ்யாவுக்குத் திரும்பியபோது கைது செய்யப்பட்ட நவல்னிக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.
நாடு முழுவதும் மூவாயிரத்து 500 இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதுடன் மொஸ்கோவில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல்களில் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், ரஷ்யா முழுவதும் உள்ள நகரங்களில் இவ்வார இறுதியில் எதிர்ப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதை அமெரிக்கா கண்டித்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும் அழைப்பு விடுத்தது.
இந்த சூழலில், உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.