அமெரிக்க அமைச்சரவை அதிகாரியின் தாய்வான் பயணம் ஒத்திவைப்பு
In அமொிக்கா November 25, 2020 5:01 am GMT 0 Comments 1541 by : Jeyachandran Vithushan

அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் அமைச்சரவை மட்டத் தலைவர் அண்ட்ரூ வீலர், தாய்வான் பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த விஜயத்தை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ள அவரது அலுவலகம் சீனாவுடன் பிரச்சினை என்ற கூற்றுக்களை நிராகரித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதத்திலிருந்து ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி மேற்கொள்ளவிருந்த மூன்றாவது பயணமாக இது கருதப்படும் நிலையில் ஜனநாயக தீவை தனது சொந்தமாகக் கூறும் சீனா குறித்த விஜயத்திற்கு கடும் ஆட்சேபனையை எழுப்பியது.
இந்த வருகை சாதகமாக அமைய வில்லை என்றபோதும் அமெரிக்க அதிகாரிகளின் எதிர்கால உயர் மட்ட பயணங்களை வரவேற்பதாக தாய்வானின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் அரசாங்கத்துடன் தாய்வான் அதன் சுற்றுச்சூழல் ஒத்துழைப்பைத் தொடரும் என்றும் தாய்வான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
காதார செயலாளர் அலெக்ஸ் அசாரின் தைபேக்கான விஜயத்தின்போது கடும் ஆட்சேபனையை எழுப்பிய சீனா, செப்டம்பர் மாதம் அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் கீத் கிராச் வருகையின்போது போர் விமானங்களை எல்லையில் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.