அமெரிக்க இராஜாங்க அமைச்சர் இங்கிலாந்து விஜயம்!
In இங்கிலாந்து May 8, 2019 9:08 am GMT 0 Comments 2028 by : shiyani

பிரெக்ஸிற்றுக்கு பின்னர் பிரித்தானியாவுடன் விசேட உறவொன்றை தொடர்வது குறித்து ஆலோசிப்பதற்காக அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோ இன்று இங்கிலாந்து விஜயம் செய்துள்ளார்.
ஈராக்கிற்கு திட்டமிடப்படாத விஜயமொன்றை மேற்கொண்டு அந்நாட்டு பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திய மைக் பொம்பியோ அந்த விஜயத்தின் பின்னர் லண்டனுக்கு வருகை தந்துள்ளார்.
லண்டன் விஜயத்தின்போது பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
பிரெக்ஸிற்றின் பின்னரான அமெரிக்க-பிரித்தானிய விசேட உறவு குறித்து இந்த சந்திப்புகளின்போது தெரேசா மே மற்றும் ஜெரமி ஹண்ட் உடன் பொம்பியோ பேச்சசுவார்த்தை நடத்துவாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.