அமெரிக்க கலவரம்: பிரித்தானிய தலைவர்கள் கண்டனம்!
In இங்கிலாந்து January 7, 2021 8:49 am GMT 0 Comments 1944 by : Anojkiyan

அமெரிக்க செனட் சபை அமைந்துள்ள கெப்பிட்டல் ஹில் கட்டட தொகுதியில் இடம்பெற்ற கலவரத்தை, பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ‘அவமதிப்பான காட்சிகள்’ என கூறி கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘அமைதியான மற்றும் ஒழுங்கான அதிகார பரிமாற்றம் இருக்க வேண்டியது அவசியம்’ என பதிவிட்டுள்ளார்.
தொழிலாளர் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர், ‘இது ஜனநாயகம் மீதான நேரடி தாக்குதல்’ என்று கூறினார்.
இதற்கிடையில், ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன், இந்த நிகழ்வுகள் முற்றிலும் திகில் நிறைந்தவை என விபரித்தார்.
ட்ரம்பின் நண்பரான நைகல் ஃபரேஜ், ‘கெப்பிட்டல் ஹில் கட்டட தொகுதியை தாக்கியது தவறு’ என டுவீட் செய்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.