அமெரிக்க ஜனாதிபதி பிரித்தானிய நாடாளுமன்றில் உரையாற்ற வேண்டும்: ஹண்ட்
In இங்கிலாந்து April 26, 2019 5:59 am GMT 0 Comments 2985 by : Risha

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பிரித்தானிய விஜயத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்ற வேண்டும் என, வெளியுறவுத்துறை செயலாளர் ஜெரமி ஹண்ட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் மிகவும் நெருக்கமான மற்றும் முக்கியமான நபரின் விஜயத்தின் போது இவ்வாறானதொரு உரைக்கான ஏற்பாடு செய்வது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் ஒரு சர்ச்சைக்குரிய அரசியல்வாதியென்ற போதிலும் அவருக்கான சாத்தியமான வரவேற்பு ஏற்பாடுகளை முன்னெடுப்பது தமது கடமை என்றும் தெரிவித்தார்.
ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஜனாதிபதி ட்ரமப் உரையாற்றுவதை கடுமையாக எதிர்ப்பதாக சபாநாயகர் ஜோன் பெர்கொவ் ஏற்கனவே அறிவித்தார்.
அதுமாத்திரமின்றி அமெரிக்க ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயத்தை பலரும் எதிர்த்து விமர்சித்து வருகின்றனர்.
பிரித்தானிய மகாராணியின் அழைப்பின் பேரில் அமெரிக்க ஜனாதிபதி எதிர்வரும் ஜுன் மாதம் 3ஆம் திகதி முதல் 5ஆம் திகதிவரை பிரித்தானியாவிற்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.