அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார் நடால்!
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், போராடி வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.
காலிறுதி போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், ஒஸ்ரியாவின் டோமினிக் தீயிமை எதிர்கொண்டார்.
இரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், யாரும் எதிர்பாராத விதமாக ரபேல் நடால் முதல் செட்டை 0-6 என மோசமாக இழந்தார்.
இதனைதொடர்ந்து மீண்டெழுந்த நடால், அடுத்த இரண்டு செட்டுகளையும் 6-4, 7-5 என அடுத்தடுத்து கைப்பற்றினார்.
இதையடுத்து, கட்டாய வெற்றியை நோக்கி போட்டியிட்ட நடால், நான்காவது செட்டில் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டார். டை பிரேக் வரை நீடித்த இந்த செட்டில் டோமினிக் தீயிமிடம் 6-7 என நடால் செட்டை இழந்தார்.
இதனால் வெற்றியை தீர்மானிக்கும் ஐந்தாவது செட், விறுவிறுப்படைந்தது. இருவரும் விட்டுக்கொடுக்கமால் விளையாடிய இந்த செட்டும் டை பிரேக் வரை நீடித்தது.
இதில் கடுமையாக போராடி, ரபேல் நடால், செட்டை 7-6 என கைப்பற்றி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.