அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: நோவக் ஜோகோவிசக் அரையிறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிக் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
காலிறுதி போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிக், அவுஸ்ரேலியாவின் ஜோன் மில்மேனை எதிர்கொண்டார்.
ஜோன் மில்மேன், நான்காம் சுற்று போட்டியில் முன்னணி வீரரான சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரரை வீழ்த்தியவர் என்பதால், இப்போட்டியில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
ஆனால், பெடரிடம் காட்டிய வித்தைகள், நோவக் ஜோகோவிக்கிடம் செல்லுபடியாகவில்லை.
இப்போட்டியில் ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய நோவக் ஜோகோவிக், 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.