அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: அரையிறுதிக்குள் நுழைந்தார் நஹோமி ஒசாகா!
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், ஜப்பானின் நஹோமி ஒசாகா வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.
காலிறுதி போட்டியில், ஜப்பானின் நஹோமி ஒசாகா, உக்ரைனின் லெசியா சுரேன்கோவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இப்போட்டியில் எவ்வித நெருக்கடியையும், அழுத்தங்களையும் எதிர்கொள்ளாத நஹோமி ஒசாகா, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் எளிதாக வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
அரையிறுதி போட்டியில், ஜப்பானின் நஹோமி ஒசாகா, அமெரிக்காவின் மெடிசன் கீசை எதிர்கொள்கிறார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.