அமெரிக்க பிரதி சட்டமா அதிபர் இராஜினாமா!

அமெரிக்க பிரதி சட்டமா அதிபர் ரொட் ரொசென்ஸ்டெய்ன் தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கையளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நம்பகமான ஆதாரங்கள் கட்சி சாராதவை என்ற அடிப்படையில் தாம் எவ்வித அச்சமுமின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்தியதாக அவர் தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, ரொட் ரொசென்ஸ்டெய்ன் எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி பதவியிலிருந்து விலகவுள்ளார்.
சட்டமா அதிபராக வில்லியம் பார் நியமிக்கப்பட்ட நிலையில், ரொசென்ஸ்டெய்ன் கடந்த மார்ச் மாதத்திலேயே பதவி விலகுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
எனினும் ட்ரம்பின் ஜனாதிபதி பதவிக்கு சவால் விடுத்த குறித்த விசாரணைக் குழுவின் கண்டறிதல்களை பொதுமக்களுக்கு அறிவிக்கும் வரையில் அவர் பதவியில் நீடிக்க முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ரஷ்யாவின் தலையீடு குறித்து ஆராய்வதற்கான விசேட ஆணைக்குழுவின் தலைவராக ரொபர்ட் முல்லரை 2017ஆம் ஆண்டில் ரொட் ரொசென்ஸ்டெய்ன் நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.