அமெரிக்க பிரமுகர் ஜப்பான் விஜயம்!
In அமொிக்கா September 14, 2018 11:21 am GMT 0 Comments 2044 by : Farwin Hanaa
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டரோ கனோவை அமெரிக்காவின் வடகொரியாவிற்கான பிரதிநிதி ஸ்டீவன் பெய்கன் இன்று (வெள்ளிக்கிழமை) தலைநகர் டோக்கியோவில் சந்தித்துள்ளார்.
சிங்கப்பூரில் அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையில் இடம்பெற்ற ஏவுகணை மற்றும் அணுவாயுதப் பரிசோதனையை முற்றாக துறக்கும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, கடந்த மாதம் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோவும், வடகொரியாவிற்கான அமெரிக்க பிரதிநிதி ஸ்டீவன் பெய்கனும் வடகொரியா பயணிக்கவிருந்தனர்.
எனினும், வடகொரியா குறித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதாகக் கிடைக்கப் பெற்ற தகவலுக்கிணங்க, அமெரிக்க ஜனாதிபதி குறித்த வடகொரியாவிற்கான விஜயத்தினை ரத்து செய்தார்.
இதனைத் தொடர்ந்து, வடகொரியாவின் 70ஆவது நிறைவு தின விழாவில் ஏவுகணைகளை காட்சிப்படுத்தாமை, ட்ரம்பிற்கு வடகொரியத் தலைவர் கிம் ஜொன் உன் அடுத்த உச்சிமாநாட்டிற்கான அழைப்பினை விடுத்தமை ஆகிய இரு காரணிகளை இட்டு மகிழ்ச்சியடைந்த ட்ரம்ப் தற்போது இரண்டாவது உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், வடகொரியா தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக ஸ்டீவன் பெய்கனின் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜப்பானுக்கான விஜயத்திற்கு முன்னர் ஸ்டீவன் பெய்கன் தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.