அமெரிக்க ராணுவ பயிற்சியில் முதல் தடவையாக விபத்துக்குள்ளான எப்-35 ஜெட்!

அமெரிக்காவில் இடம்பெற்ற ஜெட் போர் விமான பயிற்சியின் போது எப்-35 எனப்படும் மிகப் பெறுமதி வாய்ந்த ஜெட் விமானமொன்று முதல் தடவையாக விபத்துக்குள்ளானமை தொடர்பாக அமெரிக்க ராணுவம் வருத்தம் வௌியிட்டுள்ளது.
தென் கரோலினாவில் இடம்பெற்ற பயிற்சியின் போது எப்-35பி ரக போர் விமானம் தரையில் மோதியுள்ளதாக கடற்படை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதன்போது, விமானி உடனடியாக வௌியில் உந்தப்பட்டதுடன், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அமெரிக்க கடற்படையினர் வௌியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்-35 போர் ஆயுத நிகழ்ச்சித் திட்டமானது உலகிலேயே மிகவும் பெரியதும், பெறுமதி வாய்ந்த ஒன்றாகவும் கருதப்படுகிறது.
உலகளவில் 3000 ஜெட் போர் விமானங்களை விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், இந்த நிகழ்ச்சித்திட்டம் 30 தொடக்கம் 40 வருடங்கள் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.