அமைச்சர் வாசுவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திய மக்கள்
In இலங்கை December 17, 2020 11:05 am GMT 0 Comments 1873 by : Yuganthini

எஹெலியகொட- தராபிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்விற்கு வருகைதந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு எதிராக மக்கள் ஆர்பாட்டமொன்றை இன்று (வியாழக்கிழமை) முன்னெடுத்திருந்தனர்.
குறித்த பகுதியில் நீர் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காகவே வாசுதேவ நாணயக்கார விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, அவ்விடத்திற்கு வந்த அமைச்சருக்கு எதிராக அப்பிரதேச மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த நீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டால் பல சிக்கல்களுக்கு நாம் முகம்கொடுக்க நேரிடும் என அவருக்கு சுட்டிக்காட்டியே எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் குறித்த பகுதியில் இருந்து வேறு பகுதிகளுக்கு நீரை வழங்கும்போது எதிர்காலத்தில் நீர் இன்றி எமது பிள்ளைகள் துன்பத்திற்கு உள்ளாக நேரிடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நிகழ்வை நடத்துவதற்கு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு மக்கள் இடமளிக்கவில்லை. இதனால் அவ்விடத்தில் இருந்து வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து, அங்கு வந்திருந்த அமைச்சரின் செயலாளரை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.