கல்முனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது வழக்குதாக்கல்!
In அம்பாறை November 21, 2019 7:56 am GMT 0 Comments 1410 by : Krushnamoorthy Dushanthini
கல்முனையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விசேட போக்குவரத்து பொலிஸாரால் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போதே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது கல்முனை சுற்றுவட்டம், நற்பிட்டிமுனை பிரதான சந்தி, தாளவட்டுவான் சந்தி,பாண்டிருப்பு, போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.
அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச்.மாரப்பன வழிகாட்டலில் இடம்பெற்ற இந்த சோதனை நடவடிக்கையில் போக்குவரத்து விதிமுறை மீறல் குற்றச்சாட்டின் கீழ் 100இற்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.