அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம்
In இலங்கை January 24, 2021 8:09 am GMT 0 Comments 1411 by : Yuganthini
அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.
‘பேச்சு சுதந்திரத்தை பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் கினிகத்தேனை நகரில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளர் கபில நாகன்தல ஏற்பாடு செய்திருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வெளியிடப்பட்ட கருத்துக்கு இதன்போது கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அரசியல் ரீதியில் பழிவாங்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதி கிடைக்கவேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இந்த அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்துகின்றது. அரசியல்வாதிகளுக்கு கருத்து வெளியிடும் சுதந்திரம் இல்லை. இவற்றை கண்டிக்கின்றோம் எனவும் போராட்டக்காரர்கள் கருத்து தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.