அரசாங்கத்திற்கு எதிராக களமிறங்க தயாராகும் சுதந்திரக் கட்சி!
In ஆசிரியர் தெரிவு February 8, 2021 6:45 am GMT 0 Comments 1652 by : Jeyachandran Vithushan

நிலவும் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார பிரச்சினைகள் காரணமாக பொது மக்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் பிரதித் தலைவர் ரோஹண லக்ஷமன் பியதாச, கடந்த தேர்தல் காலங்களில் இந்த அரசாங்கம் மீது பொதுமக்கள் கொண்டிருந்த நம்பிக்கை தற்போது இல்லாது போய்விட்டதாக கூறினார்.
அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளின் காரணமாக தற்போது விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் வேலைநிறுத்த போராட்டங்களை தொடங்கியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே அரசாங்கம் இவ்வாறு தனது கடமைகளை நிறைவேற்றத் தவறியுள்ளதால் மக்களின் போராட்டத்திற்கு முன்னின்று செயற்படவும் ஆதரவு வழங்கவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராக இருப்பதாக கூறினார்.
மேலும் மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்களை தண்டிக்க ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மோசடி மற்றும் ஊழலைத் தடுக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் கட்சியின் பிரதித் தலைவர் ரோஹண லக்ஷமன் பியதாச குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.