அரசாங்கம் இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது – ருவான்
In இலங்கை February 17, 2021 12:40 pm GMT 0 Comments 1253 by : Jeyachandran Vithushan

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக, இந்தியாவுடனான நல்லுறவு சிதைவடைந்துவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்தியா, பாகிஸ்தான் போன்ற பிராந்திய நட்பு நாடுகளுடன் இலங்கை தொடர்ந்து நல்லுறவுடன் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
தற்போதைய அரசாங்கம் இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்றும் இது எதிர்காலத்தில் இலங்கையை மோசமாக பாதிக்கக்கூடும் என்றும் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாரதீய ஜனதா கட்சி இலங்கையில் தனது அரசியல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், அரசியல் நோக்கத்திற்காக வெளியான அறிக்கை என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.