அரசாங்கத்தில் இருந்து என்னை நீக்குவார்களா என்பது குறித்து எனக்கு தெரியாது- விமல்
In இலங்கை February 19, 2021 9:30 am GMT 0 Comments 1553 by : Yuganthini

நான் ஒருபோதும் அரசாங்கத்தை விட்டு வெளியேறமாட்டேன். ஆனால், அரசாங்கம் என்னை நீக்குமா என்பது குறித்து எனக்கு தெரியாதென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இன்று (வெள்ளி்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளதாவது, “தற்போதைய அரசாங்கம் ஆரோக்கியமான முறையில் முன்னேறும் என்று நம்புகின்றேன்.
மேலும், சில சிக்கலான சூழ்நிலைகளை அகற்றவும் நாட்டு மக்களால் வழங்கப்பட்ட ஆணையை முன்னெடுத்துச் செல்லவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதேவேளை நான், அரசியலுக்கு பிரவேசித்த நாள் முதல் தேசிய வளங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தி வருகின்றேன்.
மேலும் தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிராகவும் குரல்கொடுத்து வருகின்றேன்.
இதேவேளை நான் அரசாங்கத்தை விட்டு வெளியேற மாட்டேன். ஆனால் அரசாங்கம் என்னை நீக்குமா என்று எனக்குத் தெரியவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.