அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்
In இலங்கை January 5, 2021 8:47 am GMT 0 Comments 1351 by : Yuganthini
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்திலும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு- கிழக்கு சிவில் அமைப்புக்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம்- நல்லூர் ஆதீன முன்றலில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
இதேபோன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.