அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்
In ஆசிரியர் தெரிவு December 10, 2020 3:34 am GMT 0 Comments 1430 by : Dhackshala

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மகஜர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மகஜர் நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மகஜரில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சி.வி.விக்கினேஸ்வரன், இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாமன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், நோகராதலிங்கம், கோ.கருணாகரம், சாணக்கியன் இராசமாணிக்கம், தவராசா கலையரசன், சித்தார்தன், மனோகணேசன், ராதாகிருஸ்ணன் உள்ளிட்ட 15 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
கடந்த 1994ஆம் ஆண்டு முதல் அவசரகால சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள 80இற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென அந்த மகஜரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.